Skip to content Skip to sidebar Skip to footer

सर्च करिए

77+Motivational Quotes In Tamil/தமிழ் மோட்டிவேஷனல் (2021)

தமிழ் மொழி quotes/Tamil motivational Quotes முயற்சி பயிற்சி நம்பிக்கையை

சுகமாக சுமப்பவர்களுக்கு

விழுவது கடினம் எழுவது சுலபம்!நடப்பது நம் கையில் இல்லை

நாம் நினைத்தாலும் நடக்குமா

என்று நினைப்பதற்கு

முயற்சியை நினைவில் வைத்து

கடந்து செல்..முயற்சிகள் ஒரு போதும்

பலனற்றது இல்லை

சிலருக்கு

நினைத்த பலன்

பலருக்கு

நிலைத்த பலன்


கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கற்பனைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக.


   


உடன் பிறந்த திறனும்

பொய்த்துப் போகும்

பழகுவதற்கு பயிற்சியும்

முனைவதற்கு முயற்சியும்

இல்லை என்றால்,


உன் புகழைப் பாட

இங்கு யாரும் தயாராகயில்லை

நீ அதற்காகதயாராகாதவரை!

Motivational Quotes In Tamil Images/மோட்டிவேஷனல் குரோட்டஸ் இன் தமிழ் இமகேஸ்தோல்வி பெற்றால்

சந்தோசம் கொள்

காரணம்.....

நீ முயற்சி செய்து இருக்கிறாய்...

என்று

முயற்சி இல்லாத ஒருவனிடம்....

தோல்வி கூட

தஞ்சம் கொள்ளாது
உன்னுடைய மிகப்பெரிய

சொத்து உன்னுடைய

உழைப்பு மட்டுமே

அதை

யாருக்காகவும் எதற்காகவும்

விட்டுக்கொடுக்காதே.


முயற்சியால் வெற்றி பெறுபவன்

மனிதன்

தானும் முன்னேறி

மற்றவரையும் ஏற்றுபவன்

மனிதனல்ல அவன் இறைவன்வாழ்வின் வெற்றி

என்பது நீ

எல்லோராலும்

அங்கீககரிக்கப்படுவது

மட்டுமல்ல.


அவமானப்பட்டாலும்

நீ முயன்று தோற்றால்

அதுவும் வெற்றிதான்.

உன்னை ஏசுபவர்கள்

என்றோ ஓர் நாள்

உன்னை பற்றி பேசுவார்கள்.
Self Motivation In Tamil/தமிழில் சுய ஊக்கம்எதையும் எதிர்கொள்ளும்

துணிவு இருந்தால் போதும்,

கடினமான சவாலையும்

எதிர்கொள்ள தோணும்.

மலர்வதும் உதிர்வதும்

மலர்களின் இயல்பு

விழுவதும் எழுவதும்

மனிதரின் இயல்பு

- தமிழ்பித்து அனுஷ்தி

ஓடுவதாக இருந்தால்

துரத்திக்கொண்டு ஓடுங்கள்...

நிற்பதாக இருந்தால் எதிர்த்து

நில்லுங்கள்

கருவாச்சியின் காதலன்


முயற்சி எனும்

படியில் நேர்மையாக

முன்னேறு..,

வெற்றி எனும் படி

தானே கீழிறங்கும்!
 


அயர்ச்சியில்லா பயிற்சியும்,

தளர்ச்சியில்லா முயற்சியும்,

வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!success motivational quotes in tamil/தமிழில் வெற்றி ஊக்குவிக்கும் மேற்கோள்கள்இது வீண் முயற்சி' என்பவர்களை

இது 'விடாமுயற்சி' என்று சொல்லவைப்பதில்

அடங்கியிருக்கிறது உன் வெற்றி!

மற்றவரின் வாய்ப்ப

தட்டிப்பறிக்கும் முன்

நினைவில் கொள்

நீ சுவாசிப்பதே

கடவுள் கொடுத்திருக்கும்

வாய்ப்பில் தான்...


இறுதிசுற்று வரை போராடி

தோற்றுவிட்டதாக நினைத்து

கலங்காதே...

நீ செய்தது முயற்சி என்னும் பயிற்சிஎட்டாத தூரமென்று

எதுவுமில்லை

முயற்சித்தால் முத்தமிடும்

தூரத்தில்தான் எல்லாவற்றையும்

வைத்திருக்கிறான்வானத்துல பரக்குறதுக்கு தான்

பறவையா இருக்கணும்..

பறக்க ஆசப்படுறதுக்கும் பறக்க

முயற்சி செய்றதுக்கும் பறவையா

இருக்கணும்னு அவசியம் இல்லை..நமக்கான நேரம்

நம்மை உயர்த்தி

நாம் யாரென்று

இவ்வுலகறியச்செய்யும்...

- இப்படிக்கு முயற்சிகள்.

தமிழில் தன்னம்பிக்கை ஊக்குவிக்கும் மேற்கோள்கள்முயற்சி செய்ய விரும்பாதவனுக்கு

முதுகெலும்பு கூட வளையாது

விடா முயற்சி செய்பவனுக்கு அந்த

பாறாங்கல் கூட வளைந்து

கொடுக்கும்..

முயற்சி என்ற நான்கெழுத்தே

வெற்றி என்ற

மூன்றெழுத்தை பெற்றுத் தரும்

மனுஷி

முடியு மென்று நினைத்துக் கொண்டே

முடியா ததையும் முயன்றுவிடு - உன்

முயற்சி வந்து முடித்து விடும்!

முடிந்து விடும் முடியா ததும்!!

#முயற்சி திருவினையாக்கும்

- எழுத்து


முயற்சி என்பது

எதுவெனில் உன்

முன்னேற்றத்திற்கான

பாதையே தவிர

இன்னொருவருக்கு

முட்டுக்கட்டை அல்ல

புரிந்து கொள்!


அயர்ந்து போகாமல

முயன்று பார்...

தோல்வி வியர்த்துப்

போகும் வரை...


நீ ஒன்றை முடிக்க எண்ணினால்

அத முடியும் வரை

மௌனம் சாதித்திடு..

நீ யார் என மாற்றான்

அறியாவரை

உன் வெற்றி உறுதி.

motivational images in tamil hd/தமிழ் எச்டியில் ஊக்கமூட்டும் படங்கள்
அதுவாக வேண்டும்

இதுவாக வேண்டும்

என ஆசை கொள்ளும் நமை..

முன்பின் அறிந்திடாத

எதுவாகவோ ஆக

முயற்சி செய்ய வைக்கிறது

முரணாண இந்த வாழ்க்கை...மனிதர்கள் எப்போதும் உடனிருப்பதில்லை,

ஆனால் அனுபவம் மட்டுமே உடனிருக்கும்..

கிடைக்கும் அனுபவங்களில் எதையும்

கற்றுக்கொள்ள மறுத்தால் அந்த அனுபவமும்

நம் உடனிருப்பதில்லை..
எதிர்த்து போராடும் எண்ணம் மட்டும்

இருந்தால் வாழ்வின் எச்சூழ்நிலையிலும்

உன்னை வீழ்த்த யாரும் வரப்போவதில்லை


போட்டிகள் நிறைந்த உலகம்

வலிமையானது மட்டுமே வெல்லும்..!

வலிமை மட்டுமே நிலைக்கும்..!

கவலைகளோடும் தயக்கத்தோடும் நின்றால்

வெட்டி தூக்கி எறிந்துவிடுவார்கள்..!தங்களை தாங்களே புதிப்பிக்காத வரை

யார் நினைத்தாலும் உங்களை மாற்றவும் முடியாது

உங்களை சுற்றி மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது


என் ஒட்டுமொத்த தோல்விகளையும்

கட்டி இழுத்து செல்கிறேன்

முயற்சி என்ற கயிற்றில்


அலைகளை கரைகளை

தொடவைக்கும் முயற்சியில்

வெற்றிபெற்ற காற்றின்

வெற்றிதான் சுனாமியோ


போட்டியில் தோல்வி

தேர்விலும் தோல்வி

நிகழ்ச்சியில் தோல்வி

காதலில் தோல்வி

பிரந்த நட்பிலும் தோல்வி

வாழ்க்கையிலே அதிக தோல்வி

இறுதியில் இத்தோல்விகளினால்

நம் முயற்சிக்கான வெற்றி

நம்கண்முன்னே வந்துதான்

செல்லும்

அதை பிடித்துக் கொள்வதும்

நம் முயற்சியால் மட்டுமே!


உன்னை தாண்டிச் செல்லும்

வெற்றிகள் எல்லாம்

நிச்சயம் ஒரு நாள்

உன் முன் மண்டியிடும்

துவளாதே முன்னேறு

மனுஷி
விடா முயற்சி

என்பது

இன்று உனக்கு

வெற்றியைத் தராது

போனாலும்

ஒரு நாள் நிச்சயம்

வெற்றியைப் பெற்றுத் தரும்


விடா முயற்சி

விடா முயற்சி

வெற்றிக்கு வழி

அசையா நம்பிக்கை -

முயற்சிக்கு மருந்து

ஆழமான சிந்தனை

அறிவுக்கு விருந்து

அடக்கமான பண்பு

ஆழுமைக்கு சிறப்புமுடியும் என்று

முயற்சித்தால்

மாகா வெற்றி பெறலாம்...!

முடியாது என்று

முரண் பட்டால்

மயிரைக் கூட

முரிக்க (வளைக்க)

முடியாது...!


விழும்போது நான் மட்டும் தான்,

எழும்போது முயற்சியுடன் /


மனமே பிறர் உன்னை

ஒதுக்கினால் என்ன??

ஓரந்தள்ளினால் என்ன??

கவலை கொள்ளாதே.,

னக்கென உள்ளோம்

உன் உயிர் உள்ளவரை.,

இப்படிக்கு

முயற்சி, தன்னம்பிக்கை, தைரியம்....


நம்மால் முடியும் என்பது

தன்னம்பிக்கை,

நம்மால் மட்டும்தான் முடியும்

என்பது தலைக்கனம்,

இப்புரிதல் உலகுக்கு தேவை

இக்கணம்.

கரையில் நிற்கும் ஓடம்..

கனவு கண்டது..!

காயம் கண்ட பிறகும்..

எதிர்த்து நின்றது..!

சிதைந்து போகும் வரை..

துணிந்து நின்றது..!

அதன் கனவுகள்..

ஏனோ தோற்றிருக்கலாம்..!

ஆனால் அதன்..

இடைவிடாத முயற்சி..


வெற்றி என்னும் எட்டாக்

கனியை பரித்திடும்

முயற்ச்சியில் மனம்
மடியத்தானேப் போகிறது

எப்படியும்;

முடிந்தவரை முடி...!


ஒவ்வொரு தொடக்கத்தின்

முடிவையும் முயற்சியே

தீர்மானிக்கிறது.
வேர் இல்லா பாசியே

பாறையின் மேல்

வளரும் போது

மனிதன் நாம்

கால் ஊன்றி

வளர முடியாதா!

வேர் இல்லா பாசியே

பாறையின் மேல்

வளரும் போது

மனிதன் நாம்

கால் ஊன்றி

வளர முடியாதா!
முயற்சிக்கிறேன்

என்றுரை...

முடியாது என

முடிக்காதே.

முயற்சி

கரை மணலில் கட்டிய கோட்டையை

கடலலை காக்குமோ

கவலைகள் சூழ்ந்து

முயற்சியை தடுக்குமோ

இதை எண்ணாத சிலரின் கனவுகள்

கரை வந்து சேருமோ


வாய்ப்புகள் காத்திருக்குமோ??

வழிகளும் வா என்று

அழைக்குமோ?

வாழ்க்கையில் சாதிக்

விரும்பினால்,

வா என்று அழைக்கும் முன்

நீயாக செல்!!